விடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. அப்படினா சென்னைக்கு?

By vinoth kumarFirst Published Nov 3, 2022, 6:52 AM IST
Highlights

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

தொடர் கனமழை காரணமாக கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடங்கியதில் இருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நகரத் தொடங்கியதால் டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. 

இதையும் படிங்க;- இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை தொடருமா..? வெதர் அப்டேட்

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது சில ஒரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் விடாமல் தொடரும் மழை..

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை... துரித நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்!!

இதையும் படிங்க;- சென்னையில் கன மழை..! நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரி..! திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்கள்

 

click me!