விருத்தாசலம் அருகே மதுபோதையில் ஆய்வு செய்ய வந்த வருவாய் அதிகாரியை பொதுமக்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே மதுபோதையில் ஆய்வு செய்ய வந்த வருவாய் அதிகாரியை பொதுமக்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு சாலையோரம் இருக்கும் கோயில் ஒன்றில் வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறையினர் அந்த கோயிலை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு விவகாரம்... உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சோதனை... என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி!!
undefined
இதை அடுத்து பொதுமக்கள் அருகில் இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் சாமியை வைத்து வழிபாடு செய்து வந்தனர். அந்த இடத்தை கடலூர் மாவட்ட வருவாய் நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்ய வந்திருந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
இதை அறிந்த மக்கள் அவரை கேள்வி எழுப்பியதை அடுத்து வருவாய் அதிகாரி அங்கிருந்து வேகமாக புறப்பட்டார். காரை துரத்தி சென்று பொதுமக்கள் அவரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் ஒரு அதிகாரி இதுபோல் மதுபோதையில் வருவது கண்டனத்திற்குரியது என்றும் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.