பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி சீருடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. வைரல் வீடியோ..!

சிதம்பரம் பேருந்து நிலைய நிழற்குடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சிதம்பரம் பேருந்து நிலைய நிழற்குடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அத்துமீறல்கள் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபக்கம் என்றால், அறியாத வயதில் காதல் என சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளில் அரங்கேறி வருகிறது. 

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் ஓடும் பேருந்தில் கால்களை தரையில் தேய்த்து கொண்டு ஸ்கேட்டிங்! பள்ளி மாணவர் கைது.. சிறையில் அடைப்பு.!

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தின் அருகே பல்வேறு ஊர் கிராமங்களுக்கு செல்வதற்காக மினி பேருந்துக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளிக்கூட சீருடையில் பள்ளி மாணவிக்கு தனியார் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிற்றில் அந்த மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.

அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுது. இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- அரசு பள்ளி கழிவறையில் சிகரெட் பிடித்த 10-ம் வகுப்பு மாணவிகள்.. நேரில் பார்த்த மாணவிக்கு என்ன நடந்தது தெரியுமா?

click me!