மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி.. ஸ்ரீமதியின் தாய் எடுத்த அதிரடி முடிவு..!

Published : Aug 24, 2022, 09:33 AM ISTUpdated : Aug 24, 2022, 09:35 AM IST
மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி.. ஸ்ரீமதியின் தாய் எடுத்த அதிரடி முடிவு..!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பல்வேறு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பல்வேறு சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்.. உயிரிழந்த மாணவியின் தோழிகள் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்.!

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை நேற்று முன்தினம் சீலிடப்பட்ட கவரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையின் நகலை கேட்டு நேற்று ஸ்ரீமதியின் பெற்றோர் சார்பில் அவரது வழக்கறிஞர் சாரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, புதுச்சேரி ஜிப்மர் குழு ஆய்வறிக்கையை  இன்று பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். 

இதனிடையே, 45 நாட்களாகியும் ஸ்ரீமதி மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. தயவுசெய்து எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்து மக்களுக்கும் எங்களுக்கும் உண்மையை சொல்லுங்கள். வரும் 26 ஆம் தேதி கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இருந்து நடைப்பயணமாக சென்னை சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு மனு அளிக்க உள்ளோம் என்று ஸ்ரீமதி தாய் செல்வி தெரிவித்தார். 

இதையும் படிங்க;-கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

இந்நிலையில், அந்த நடைபயணம் செய்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேஷன், பள்ளிகல்வித்தறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!