முடிவெட்ட சொன்ன ஹெட் மாஸ்டர்.. நேராக சென்று பூச்சி மருந்தை குடித்த பிளஸ் 2 மாணவன்..!

Published : Jul 20, 2022, 07:10 AM ISTUpdated : Jul 20, 2022, 07:12 AM IST
முடிவெட்ட சொன்ன ஹெட் மாஸ்டர்.. நேராக சென்று பூச்சி மருந்தை குடித்த பிளஸ் 2 மாணவன்..!

சுருக்கம்

விருத்தாசலம் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் முடிவெட்டி வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதால் பிளஸ் 2 மாணவன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருத்தாசலம் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் முடிவெட்டி வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதால் பிளஸ் 2 மாணவன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முகாசபருர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா அதிகளவில் தலைமுடி வைத்துள்ள மாணவர்களை தனியாக அழைத்து, தலை முடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டுமென என கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- சேலம் அரசுப்பள்ளியில் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா?

அப்பொழுது மாணவன் ஜெயக்குமார் தலை முடியை வெட்ட மாட்டேன் என்று கூறியததாகவும், அதற்கு தலைமை ஆசிரியர், தலை முடியை வெட்ட கூடாது என்று நினைத்தால் பள்ளியின் பெற்றோர் கழக பொறுப்பாளர்களிடம் கையொப்பம் வாங்கி வா என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்துள்ளார். 

இதையும் படிங்க;-  ரயில்பெட்டி மீது ஏறி செல்ஃபி.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

இதனையடுத்து, மருந்து கடையில் எறும்புக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மாணவன் பள்ளியில் திடீரென மயங்கியதாகவும், சக நண்பர்களிடம் மருந்து குடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்  மாணவனை, மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி சின்னசேலம் மாணவி மரணம், சேலம், காஞ்சிபுரம் மாணவர்கள் தற்கொலை முயற்சி வரிசையில் தற்போது கடலூர் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;- உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!