அம்மா என்ன நாலு பேரு சேர்ந்து நாசம் செஞ்சுட்டானுங்க.. 10ம் வகுப்பு பள்ளி மாணவியின் நண்பர்களே கூட்டு பலாத்காரம்

By vinoth kumar  |  First Published Jul 8, 2022, 1:25 PM IST

கடலூரில் 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கடலூரில் 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது.  இந்நிலையில், அந்த பள்ளி 10ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது மாணவி கடந்த மே 22ம் தேதியன்று அதே பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த அந்த மாணவியின் காதலனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சியில் வேறு சில மாணவர்களும் கலந்து கொண்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- நைட்டு திருட வந்த இடத்தில் நைட்டி விலகிய நிலையில் தூங்கிய கல்லூரி மாணவி.. சல்லாபத்தில் பாய்ந்த சிறுவன்.!

பிறந்தநாள் நிகழ்ச்சியில் அந்த மாணவனுடன் மாணவி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பிறந்தநாள் கொண்டாடிய மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்துள்ளான். இந்நிலையில் கடந்த 1ம் தேதி பள்ளி மதிய உணவு இடைவெளியின் போது அந்த மாணவியை சக மாணவன் ஒருவன், "உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது. என்னுடன் வா என்று மிரட்டி அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்கு உள்ளே மாணவி சென்றவுடன் அந்த மாணவன் வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுள்ளான். அப்போது அந்த வீட்டின் உள்ளே மேலும் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் இருவர் இருப்பதைப் பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க;-  மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன ஊழியர்.!

இதனையடுத்து, தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த 3 பேரையும், புகைப்படத்தை அனுப்பிய முன்னாள் மாணவனையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இதனையடுத்து, 4 சிறுவர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க;-  ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

click me!