பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. முகநூல் வீடியோ வெளியிட்ட நபரின் நிலையை பார்த்தீங்களா.!

By vinoth kumar  |  First Published Oct 11, 2022, 8:52 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட மாணவி,  பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கீரப்பாளையம் அருகே வட ஹரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள  தனியார் பாலிடெக்னிக்கில் ஆட்டோ மொபைல் 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி சீருடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. வைரல் வீடியோ..!

இதையடுத்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல பிரிவு அலுவலர் ரம்யா, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியையும், மாணவனையும், அவர்களுடைய பெற்றோரையும் காவல் நிலையம் வர வைத்து விசாரித்தனர். இதனிடையே, முகநூலில் வீடியோ வெளியிட்ட நபரான பாலாஜி கணேஷ் என்பவரிடம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 இந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;- பள்ளிக் கூடத்தில் 20 மாணவிகளுக்கு பிராக்கெட்.. ஷிப்ட் போட்டு உல்லாசம்.. 9 ஆம் வகுப்பு மாணவன் வெறித்தனம்.

click me!