பயங்கர சத்தத்துடன் வெடித்த அரசு பேருந்தின் டயர்!திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!அலறியடித்து வெளியேறிய பயணிகள்

Published : Nov 14, 2022, 06:43 AM ISTUpdated : Nov 14, 2022, 07:45 AM IST
பயங்கர சத்தத்துடன் வெடித்த அரசு பேருந்தின் டயர்!திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!அலறியடித்து வெளியேறிய பயணிகள்

சுருக்கம்

சென்னையில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து நேற்று இரவு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது.

சென்னையில் இருந்து மயிலாடுதுறை சென்ற அரசுப் பேருந்து சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்றபோது பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். 

இதையும் படிங்க;- கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

சென்னையில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து நேற்று இரவு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. அப்போது, பேருந்தில் சில பயணிகள் ஏறியதை அடுத்து ஓட்டுநர் பேருந்தை இயக்க தயாராக இருந்தார். அப்போது, அரசு பேருந்தில் பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. எதிர்பாராத விதமாக திடீரென பேருந்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அவசர அவசர வெளியேற்றினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. உடனே இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க;-  கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை... தாயும் குழந்தையும் உயிரிழப்பு... திண்டிவனத்தில் நிகழ்ந்த சோகம்!!

ஆனால், பேருந்து முழுவதும் தீக்கரையானது.  இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;-  பைக் விபத்தில் கல்லூரி மாணவன் பலி! வேதனையில் கண்ணாடி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொண்ட நண்பர்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!