சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி... கடலூரில் நிகழ்ந்த சோகம்!!

By Narendran S  |  First Published Nov 8, 2022, 5:41 PM IST

கடலூர் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சாலைகளில் பள்ளங்களும் தோண்டப்பட்டு வருகிறது. அவ்வாறு தோண்டப்படும் பள்ளங்கள் அப்படியே விடப்படுவதால் ஏராளமான விபத்துகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த பள்ளங்கள் அனைத்திலும் மழை நீர் தேங்கி மேலும் அபாயமான சூழல் ஏற்படுகிறது.

இதையும் படிங்க: சிஎம்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாண ராக்கிங்; 7 மாணவர்கள் சஸ்பெண்ட்; வைரல் வீடியோ!!

Tap to resize

Latest Videos

undefined

அவ்வாறு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன உயிரிழந்த சம்பவம் கடலூர் அருகே அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாகரம் கிராமத்தில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணியின் போது நிழற்குடை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் தற்போது மழை நீர் தேங்கி இருந்துள்ளது. 

இதையும் படிங்க: ஆதிக்கம் செலுத்தும் ஆளுநர்கள்: எதிர்க்கும் 3 தென் மாநில முதல்வர்கள்

இந்த நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் என்ற 11 வயது சிறுவன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

click me!