கோவையில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் தர மறுத்து கடையை சூறையாடிய இளைஞர்களால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Mar 24, 2023, 9:02 AM IST

சூலூரில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவுயில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது தேனீர் கடைக்கு வந்த ஐந்து இளைஞர்கள் தேனீர் அருந்திவிட்டு அங்கிருந்த டி கேக்கை சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்டு முடித்த பின்பு கடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவா என்ற டீ மாஸ்டர் சாப்பிட்ட கேக்குக்கு பணத்தைக் கேட்டுள்ளார். 

அதற்கு அந்த இளைஞர்கள் கோபமடைந்து கேக் கெட்டுப் போய் உள்ளது. அதனால் பணம் தர மாட்டேன் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கேக் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து கீழே தரையில் போட்டு உடைத்துள்ளனர். அதேபோல அங்கு வைக்கப்பட்டிருந்த மற்ற 5 கண்ணாடி பாட்டில்களை தரையில் போட்டு உடைத்துள்ளனர். தொடர்ந்து டீ மாஸ்டரையும் தாக்க முயன்றுள்ளனர். 

Tap to resize

Latest Videos

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கூச்சலிட அங்கிருந்து இளைஞர்கள் தப்பித்து சென்றுள்ளனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இது குறித்து டீ மாஸ்டர் சிவகுமார் கூறும்போது இளைஞர்கள் 5 பேர் தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டாவது முறையாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை உடைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!