சோதனை என்ற பெயரில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை அள்ளிச்சென்ற போலீஸ்; கோவையில் இளம்பெண் பரபரப்பு புகார்

By Velmurugan s  |  First Published Dec 30, 2023, 11:32 PM IST

சோதனை என்ற பெயரில் காவலர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றதாக கோவையில்  இளம் பெண் குற்றம் சாட்டும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


கோவை, கவுண்டம்பாளையம் பாலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மகள் சிந்து (வயது 23). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு வந்த இருவர் ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டியதாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் சிந்து புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் உமா, ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் ஜாதி பெயரை சொல்லி திட்டியது, உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் சிந்து தனது வழக்கறிஞரை சந்திப்பதற்காக கோவை நீதிமன்ற வளாகம் பின்புறம் உள்ள கோபாலபுரம் பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த உமா திடீரென சிந்துவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. உமாவும், சிந்துவும் அங்கு ஒருவரை ஒருவரை தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த சம்பவம் தொடர்பாக உமா அளித்த புகாரின் பேரில் சிந்து மற்றும் பார்த்திபன்  மீதும் சிந்து அளித்த புகாரின் பேரில் உமா மீதும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் இன்று கவுண்டம்பாளையம் பாலன் நகரில் உள்ள சிந்துவின் வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீசார் தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை  தலைமையில் திடீரென புகுந்துள்ளனர். அப்போது சிந்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்திருந்த போலீஸ்காரர்களுடன் ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டும் சீருடைகள் வந்திருந்தார். தொடர்ந்து அவர்கள் வீட்டில் புகுந்து ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர். 

பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து சிந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:  ஏற்கனவே நான் அளித்துள்ள இரண்டு புகார்களை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றுள்ளனர். கடந்த வாரமும் இதேபோல போலீசார் வீட்டுக்கு வந்து மிரட்டி சென்றனர் . மேலும் இன்று வந்த போலீசார் வீட்டில் வைத்திருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணம் ஐந்தரை பவுன் தங்க நகை மற்றும் அதற்குண்டான ரசீதுகள் அனைத்தையும் எடுத்து சென்று விட்டனர் என்று பேசியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!