தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செங்கல் திருட்டு; இருவர் கைது, லாரிகள் பறிமுதல்

By Velmurugan s  |  First Published Dec 29, 2023, 7:18 PM IST

கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டவிரோதமாக செங்கல் திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்குப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைத்தது. மேலும் சூளைக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு தொழிற்சாலை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக செங்கற்கல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்குச் சென்ற தடாகம் காவல் துறையினர் செங்கல் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் லாரியின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும்; சுயநலம் இருக்காது - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

மேலும் இத்தகைய கனிமவள கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருங்காலங்களில் இத்திருட்டுச் சம்பவம் நடைபெறாமலும், நீதியை நிலைநாட்டும் வகையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!