கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியபோது மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இன்று அதிகாலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், நாயக்கன்பாளையம், தடாகம் காப்புக் காட்டிற்கு வெளியே, சுமார் 1 கி.மீ. தொலைவில், பூச்சியூர் குறுவம்மா கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த காட்டு யானையை மீண்டும் வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது அருகில் உள்ள பட்டா நிலத்தில், உள்ள மின் வாரிய மின் கம்பி விநியோக சிமெண்ட் போஸ்ட் மீது யானை உடலை தேய்த்துள்ளது. அப்போது மின்சார வாரிய சிமெண்ட் கம்பம் உடைந்து சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் மற்றும் மின் கம்பி யானை மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த ஆண் யானை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை தனியார் கல்லூரி ஓரினச்சேர்க்கை பேராசிரியரால் பாலியல் தொல்லை; மாணவர் பரபரப்பு புகார்
இதனைத் தொடர்ந்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் யானையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் யானையை உடற்கூறாய்வு செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் தான் டார்கெட்; 4 இளைஞர்களை பொறி வைத்து தூக்கிய காவல்துறை
கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் மொத்தமாக 4 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் தற்போது கோவையில் காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.