கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உழவர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், வால்பாறை எம்.எல்.ஏ அமல் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னை விவசாயத்துக்கு எல்லாவிதமான உதவிகள் செய்தாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய இழப்பீடு மாநில அரசு மூலம் மத்திய அரசு கொடுக்கிறது என மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உழவர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், வால்பாறை எம்.எல்.ஏ அமல் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
undefined
இதையும் படிங்க;- விளையாடிய போது அடுத்தடுத்து குளத்தில் தவறி விழுந்த 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலியான சோகம்..!
கரும்பு இனப்பெருக்க அதிகாரிகள் மற்றும் தென்னை வாரிய அதிகாரிகள் இந்தியிலும், தமிழிலும் மாறி மாறி வரவேற்புரை நிகழ்த்தினர். இந்த விழாவில் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்;- இந்தியில் வரவேற்பு தெரிவித்து விட்டு தமிழில் பேசினார். அப்போது, ''தென்னை விவசாயிகள் மத்திய அமைச்சரிடம் எங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயத்துக்கு மரியாதை குறைந்து வருகின்றது. விவசாயிகளுக்கான வருமானத்தை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் மூலமாக நிறைவேற்ற முடியும். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு மாநில அமைச்சர் நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.
இதனைதொடர்ந்து பேசிய பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன்;- கோவை மாவட்டம் தொழில் துறையில் மட்டுமில்லை, வேளாண் துறையிலும் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. தற்போது தேங்காய்க்கு விலையே இல்லை. தேங்காய் மட்டைக்கும் விலை இல்லை, கொப்பரைக்கும் விலை இல்லை. 140 ரூபாய்க்கு விற்ற கொப்பரை தேங்காய் தற்போது வெறும் 70 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. ஆண்டிற்கு 8 முறை தேங்காய் இறக்கும் நிலையில், ஓரே ஒரு முறை மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. 7 முறை கொள்முதல் செய்யப்படுவதில்லை. மேலும் தேங்காய் எண்ணெய் சாப்பிடக் கூடாது என்பதை போல கொண்டு சென்று விட்டனர். தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம் என்பதை மத்திய, மாநில அரசுகள் விளம்பரப்படுத்த வேண்டும். கொப்பரை தேங்காயை ஒரே ஒரு முறை கொள்முதல் செய்வது என்பதை யார் கொண்டு வந்து இருந்தாலும் தவறுதான் என்றார்.
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருங்கால பட்ஜெட் இருக்கும். 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை இதுவரை கொள்முதல் செய்து இருக்கிறோம். மத்திய அரசு அனுமதி கொடுத்தால் இன்னும் அதிகமாக கொள்முதல் செய்ய தயாராக இருக்கிறோம். ஆண்டு முழுவதிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம். மத்திய அமைச்சரிடம் பேசி வானதி சீனிவாசன் அனுமதி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இறுதியாக பேசிய மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்;- விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு. இதை பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு. தென்னை விவசாயம் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் உற்பத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இதில் தமிழகம் முக்கிய இடத்தில், குறிப்பாக கோவை முக்கிய இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் 21 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் விவசாயம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும். தென்னை விவசாயத்துக்கு எல்லாவிதமான உதவிகள் செய்தாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய இழப்பீடு மாநில அரசு மூலம் மத்திய அரசு கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- தனது குடும்பத்தையே வாரி கொடுத்த தாய்க்கு இப்படி ஒரு நோயா? உதவி கரம் நீட்டிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்.!