விளையாடிய போது அடுத்தடுத்து குளத்தில் தவறி விழுந்த 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலியான சோகம்..!

Published : Oct 15, 2022, 10:04 AM ISTUpdated : Oct 15, 2022, 10:09 AM IST
விளையாடிய போது அடுத்தடுத்து குளத்தில் தவறி விழுந்த 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி பலியான சோகம்..!

சுருக்கம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம். நேற்று மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்தனர். 

சூலூரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம். நேற்று மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்தனர். 

இதையும் படிங்க;- Chennai Power Shutdown: சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. இன்று இந்த பகுதிகளில் 5 நேரம் கரண்ட் இருக்காது..!

இதனை அருகில் இருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு செல்வதற்கு உள்ளாகவே மூவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, 3 பேரும் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;-  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை!!

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?