புரோட்டா போட தெரிந்தவர்கள் தான் ஹோட்டல் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - மை வி3 ஆட்ஸ் நிறுவனர்

By Velmurugan s  |  First Published Feb 10, 2024, 11:10 AM IST

ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கோ, தொடர்ந்து நடத்துவதற்கோ படிப்பு தேவை இல்லை, திறமை இருந்தால் போதும் என மை வி 3 நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.


கோவை ஆனைகட்டி பகுதியில மை வி3 ஆட்ஸ் அலுவலக பயன்பாட்டிற்காக சிறிய கனரக வாகனங்கள் துவக்க விழாவில் அதன் நிறுவனத் தலைவர் சக்தி ஆனந்த் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எங்களது நிறுவனங்களில் ஹெல்த் கேர், ஹோம் கேர், கிச்சன் கேர், உமன்ஸ் கேர், மென்ஸ் கேர் என  100 பொருட்கள் இருக்கின்றன. 

Tap to resize

Latest Videos

சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களுக்கு  பிரஷர் கொடுக்கலாம். எங்களை  வளரக்கூடாது என நினைக்கலாம். அவர்களது உள்நோக்கம் என்ன என தெரியவில்லை. அவர்கள் என்ன செய்தாலும் அதனை சட்ட படி  சந்திக்க தயார். தேர்தலையொட்டி யாரும் வரவில்லை. பொதுவாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஒரு சில கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களுக்கு நாங்கள் புரிய வைப்போம்.

தமிழ்நாடு அளிக்கும் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு: சென்னையில் பேனர்!

ஆன்லைன் டிவி குறித்த கேள்விக்கு, அந்த நிறுவனத்தில் நான் வேலை செய்துள்ளேன். இடையில் நோய்த்தொற்று காலத்தில் ஒரு சில தடங்கல்கள் இருந்தன. அதனைத் தொடர்ந்து தான் நான் மை வி3 ஆட்ஸ் தொடங்கினேன். ஆன்லைன் டிவி மற்றும்  மை வி3 ஆட்ஸ் என முடிச்சு போடுகிறார்கள். காழ்புணர்ச்சி காரணமாக, பொறாமை காரணமாக இந்த பிரச்சினையை வேறு ஒரு ரூபமாகவும், பெயரைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Unicef அவர்கள் ஒரு நம்பரை போட்டுத்தான் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் நான் வெற்றி பெற்றதற்காக கொடுத்து உள்ளனர். நடிகருக்கு கொடுத்து இருக்கிறார்கள், சமூக ஆர்வலர்களுக்கு கொடுக்கிறார்கள், அதுபோலதான் எனக்கும் கொடுத்தார்கள். அந்த  டாக்டர்  பட்டம்  உண்மையா என அவர்கள் தான் சரி செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். டாக்டர் பட்டம் பெற்று நாங்கள்  என்ன ஊசியா போடுகிறோம்? அது ஒரு கௌரவம்  மட்டுமே.

இந்தியாவை விற்று வாங்கும் அந்த 4 பேர் - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு!

ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு படிப்பு தேவை இல்லை. திறமை இருந்தால் போதுமானது. புரோட்டா போட தெரிந்தால் தான் உணவகம் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலாளிக்கு நிர்வாக திறமை இருந்தால் போதும். இந்த பிளான் மோசம், இது பிராடு, இந்த ஸ்கீம் பெரிய மோசடி என  பிரச்சாரம் செய்தார்கள். இனிமேலும் நான் சரியாக செய்வேன். எங்களுக்கு மக்கள் சக்தியும் எங்களிடம் நியாயமும் இருக்கிறது. 

நான் பிசினஸ்மேன் மட்டுமே உலகத்தில் நம்பர் ஒன் ஆக வர வேண்டும். இன்றைக்கு 240 ஸ்டோர்ஸ் ட்ரெயினிங்காக வந்துள்ளார்கள். நெருக்கடிகள், நிர்பந்தங்கள் தொடர்ந்தால் இதெல்லாம் பண்ணினால் தான் பாதுகாப்பு என்று தெரிந்தால் என்ன நடக்கும்னு தெரியாது. முழு நோக்கம் பிசினஸ் மட்டுமே. அரசியல்வாதிகள், அரசு கேள்வி கேட்கட்டும். அதற்கு முறையாக பதில் சொல்கிறேன். நேரடியாக வந்து கட்சி பெயரை வைத்துக் கொண்டு தேவையில்லாமல் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்றார்.

click me!