திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்; திடீரென வாக்குச்சாவடிக்கு எண்ட்ரி கொடுத்த எல்.முருகன் - கோவையில் பரபரபு

By Velmurugan sFirst Published Apr 19, 2024, 1:09 PM IST
Highlights

கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரேகவுன்டம்பாளையம் ஊராட்சி கெம்ப் நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி காலை முதல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாக்கு பதிவு மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தனது வாக்கினை பதிவு செய்ய தன்னுடைய பேரனுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கு சென்றபோது தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகளிடம் மூன்றாவது பட்டனை அழுத்தி பா.ஜ.கவுக்கு வாக்களிக்க சொல்லியுள்ளார். ஆனால் அங்கு பணியில் இருந்த அதிகாரி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், திமுக வேட்பாளருக்கு வாக்களித்து பட்டன் அழுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு சாவடிக்கு சென்று அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இன்னைக்கு ஒரு நாள் தான் தேர்தல்; நாளை நான் யாரென காட்டுரேன் - திமுக நிர்வாகியின் மிரட்டலால் போலீஸ் அச்சம்

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் உடனடியாக அங்கு பாஜக வேட்பாளர் எல்.முருகனும் வந்தார். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் தேர்தல் அதிகாரிகள் முறையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்த வேண்டும். ஒரு தலை பட்சமாக செயல்பட்டால் அது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என எச்சரித்தார்.

நான் பணம் வழங்கியதாக நிரூபித்தால் அந்த நிமிடமே அரசியலைவிட்டு விலகுகிறேன் - அண்ணாமலை அதிரடி

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சரும், வேட்பாளருமான எல்.முருகன், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அதனை மீண்டும் ஒருமுறை இந்த வாக்குச்சாவடியில் அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட அந்த தேர்தல் அதிகாரி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எல். முருகன் தெரிவித்தார்.

click me!