Annamalai: உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது; அண்ணாமலையின் பதிலால் கூட்டணியில் சலசலப்பு

By Velmurugan sFirst Published Apr 17, 2024, 5:45 PM IST
Highlights

உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்ற அண்ணாமலையின் பதிலால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சங்கடத்திற்கு உள்ளாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை புளியமரத்து பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாணவி ஒருவர் அண்ணாமலையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இளம் பெண் ஒருவர் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் அண்ணாமலை தொடர்ந்து பதில் அளித்தார்.

அப்போது, நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. நீட் தேர்வு மூலமாக தமிழகத்தில் பல ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். நீட் தேர்வு இல்லை என்றால், திமுக அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள் மூலம் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் தான் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் நிலை இருக்கும்.

மோடியின் ரோஷோவை பார்க்கும் போது இறுதி ஊர்வலம் தான் நியாபகத்திற்கு வருகிறது - சி.வி.சண்முகம் கிண்டல்

தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களை அரசியல் கட்சியினர் தற்கொலைக்கு தூண்டுகின்றனர். தற்கொலைக்கு முயற்சிக்கும் நபரை சிறையில் அடைத்தால் தற்கொலையின் எண்ணிக்கை குறையும். நீட் தேர்வை ரத்து செய்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்றால் எங்களுக்கு அந்த அரசியல் தேவை கிடையாது என்றார்.

தேனியில் மீண்டும் போட்டியிடுவது தினகரனின் பூர்வ ஜென்மத்து புண்ணியம் - பெண்களிடம் ஸ்கோர் செய்யும் அனுராதா தினகரன்

இதனிடையே பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கம் இட்டு வந்த நிலையில், அண்ணாமலையின் பதில் கூட்டணிகட்சி தலைவர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!