கோவையில் முதியோர் இல்லத்திற்கு சென்று வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய நிலையில், அங்கிருந்த முதியவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி ஆசி வழங்கினர்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரைகள் நிறைவு பெறுகின்றன. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை கஸ்தூரி நாயக்கன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு சென்று அங்கு இருக்கும் முதியவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஒரு வருட காலமாக உங்களை வந்து சந்திக்க வேண்டும். உங்களுடன் இருக்க வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்தேன் ஆனால், என்னால் வர இயலவில்லை.
நாட்டில் தொகுதி பக்கமே போகாத ஒரே ஜோதிமணி தான் - விஜயபாஸ்கர் விமர்சனம்
தற்போத தேர்தல் பரப்புரைகள் நிறைவு பெறும் நிலையிலாவது உங்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து தான் இப்போது வந்திருக்கின்றேன். உங்கள் மகனாக இருந்து பணியாற்ற காத்திருக்கிறேன். எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரெ உணர்ச்சிவசப்பட்ட அண்ணாமலை ஒரு கட்டத்தில் அழத் தொடங்கினார்.
மத்தியில் இழுபறி வந்தால் யாருக்கு ஆதரவு? பாஜகவுக்கா? எடப்பாடி பழனிசாமி கொடுத்த பரபரப்பு பதில்!
அண்ணாமலை உணர்ச்சிவசப்பட்டதை அறிந்த முதியவர்கள் அனைவரும், ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பி அவருக்கு ஆருதல் கூறினர். மேலும் நாங்கள் அனைவரும் உங்களை ஆதரிப்பதாகக் கூறி அட்சதை தூவியும், திலகமிட்டும் ஆசி வழங்கினர். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.