கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்களுக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு போதை பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபட உதவுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்கு வருபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சி பெட்டி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் புகையிலை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வருவாய்… மத்திய அரசு தகவல்!!
அதன் ஒரு பகுதியாக மருத்துவமனையில் தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்து மருத்துவர்கள் கூறுகையில், போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சைக்கு வருபவர்கள் பல்வேறு விதமான மன நிலையில் வருவதால் இவர்களுக்கு தியானம், யோகாசனம், மனநல ஆலோசனைகள் இவற்றுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு போதையில் இருந்து மீட்கப்படுகின்றனர். போதைக்கு அடிமையாகி மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படுபவர்களை சாந்தப்படுத்தும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு வருபவர்களின் நிலையைப் பொருத்து 15 நாள்கள் முதல் 30 நாள்கள் தங்கியிருந்து ‘சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி.. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
இதனால் ஒரு சில நேரங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இறுக்கமான சூழல் ஏற்பட்டு மருத்துவர்கள், கண்காணிப்பளர்களிடம் வாக்குவாதம் செய்வது, வெளியே செல்ல நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தவிர்க்கும் விதமாக போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சிப் பெட்டி வைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் படங்களை கண்டுகளித்து மன இறுக்கத்தில் இருந்து விடுபட முடியும். அதே போல் சதுரங்கம், கேரம் போர்டு போன்ற உள்விளையாட்டு அரங்கில் விளையாடக் கூடிய விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது என்று தெரிவித்தனர்.