கோவை ஆட்சியர் அலுவலம் முற்றுகை; 1000 தூய்மை பணியாளர்கள் போராட்டம்

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 11:03 AM IST

அரசு நிர்ணயித்த கூலி வழங்குதல், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


கோவை மாவட்டம் முழுவதும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த  சம்பளத்தை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும், கோவை மாவட்ட தூய்மை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக தூய்மை பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் போதைப்பொருள் விற்ற நைஜீரிய பெண் கைது; ரூ.5.75 லட்சம் கொகைன் பறிமுதல்

Latest Videos

undefined

போராட்டத்தின் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர். ஆனால் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.

புதுவையில் மின்வாரிய ஊழியர்கள் கைது; துணைராணுவ கட்டுப்பாட்டில் மின் நிலையங்கள்

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள்  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமிருக்கும் தொழிலாளர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

click me!