கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன், மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல். இங்கு அமர்நாத் காலனியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா. இவர் உயிருடன் இல்லை. இவர்களது மகன் பென்னிஸ்குமார். இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ஏ படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் திருவள்ளுவர் விடுதியிலுள்ள அறை உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, தீபக் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய சக மாணவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்காததால் , கதவை உடைத்து பார்த்த போது பென்னிஸ் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது தெரிய வந்தது.
உடனடியாக, பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் மூலம் வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பென்னிஸ்குமாரை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனன்றி பென்னிஸ்குமார் உயிரிழந்தார். வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
undefined
தற்கொலை செய்த அறையில் இருந்து காவலர்கள் பென்னிஸ்குமார் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.அதில், எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. வீட்டில் வைத்து இறக்க விரும்பமில்லை என்பதால் இங்கு தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இறப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார் . அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இருதரப்பினர் இடையே அடிதடி… ஒரு தரப்புக்கு கத்தி குத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!