கோவை ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்; ஹோலி பண்டிகைக்கு செல்ல சிறப்பு ரயில்

Published : Mar 06, 2023, 02:44 PM IST
கோவை ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்; ஹோலி பண்டிகைக்கு செல்ல  சிறப்பு ரயில்

சுருக்கம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் வசதிக்காக கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வட மாநில தொழிலாளர்கள் கோவை திருப்பூர் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜவுளித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஹோலி பண்டிகை ஒட்டி இவர்கள் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். தற்போது தெற்கு ரயில்வே கோவை - பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து இன்று  இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை மறுதினம் 8 மணிக்கு பீகார் மாநிலம்  பாட்னாவுக்கு செல்லும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது.

பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம்

மொத்தம் பத்து முன் பதிவு பெட்டிகளும் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் சிரமம் இன்றி பயணம்  மேற்கொள்ள சிறப்பு. ரயில் இயக்க பட  உள்ளது குறிப்பிட தக்கது. இந்த ரயிலில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

அகழாய்வில் தோண்ட தோண்ட புதையல்கள்; கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்வர் பெருமிதம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீடுகளில் கொள்ளை! வடமாநில குற்றவாளிக்கு சரியான ஆப்பு வைத்த கோவை போலீஸ்