பொள்ளாச்சியில் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை

By Velmurugan s  |  First Published Mar 2, 2023, 2:29 PM IST

பொள்ளாச்சியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி  சி டி சி காலனி பகுதியில் சதாசிவம் என்பவர் அண்ணாமலை பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனா். இந்நிலையில், திடீரென நிதி நிறுவனம் மூடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில் திடீரென நிதி நிறுவனம் மூடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி

Latest Videos

undefined

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம், நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சதாசிவம் மீது புகார் மனு அளித்தனர். இதை அடுத்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அண்ணாமலை நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் உரிமையாளர் சதாசிவம் தலைமறைவாக உள்ளதால் தனி படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். முதலீடு செய்த பொதுமக்கள் நிதி நிறுவன அலுவலகத்தின் முன்பு குவிந்து வருவதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகு விமரிசையாக நடைபெற்ற கோவை தேர் திருவிழா

அன்மை காலமாக அதிக அளவில் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் வரை மக்களிடம் நன்மதிப்பை பெற்று முதலீடுகள் அதிகம் பெறப்பட்ட பின்னர் நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இதனால் தங்களது பணம் நிறுவனம் மற்றும் அரசால் முடக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள முதலீட்டாளர்கள், இதுபோன்ற பொய்யான விளம்பரங்கள் மூலம் நிதி நிறுவனங்களை தொடங்கும் நபர்கள் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!