கோவையில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் மூலம் செல்போன் ஆர்டர் செய்த தம்பதியினருக்கு போலியான பொருட்கள் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து குமார். கடந்த 5ம் தேதி பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் செல்போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு டெலிவரி வந்த செல்போனை பிரித்து பார்க்கும் போது அதில் போலியான செல்போன்கள், பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அந்த தம்பதியர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
தற்போது வரக்கூடிய ஆன்லைன் டெலிவரி எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தையும் பிரித்து பார்க்கும் போது அதை வீடியோவாக எடுக்க வேண்டுமென ஒரு வேண்டுகோளை ஆன்லைன் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் அந்த தம்பதி தங்களுக்கான பார்சலை பிரிக்கும் போது வீடியோ பதிவு செய்துள்ளனர். அதில் போலியான பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
10 ரூபாய்க்கு அண்லிமிடட் சாப்பாடு; ஏழை, எளியோரின் பசியாற்றும் தனியார் அறக்கட்டளை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நாங்கள் சரியான பொருட்களை தான் தங்களிடம் கொடுத்தோம் என சொல்வதாக தெரிவித்தார். தற்போது ஆன்லைனில் அதிகமான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் போலியான இணைய முகவரிக்குச் சென்று பொருட்களை ஆர்டர் செய்வதால் இதுபோன்ற போலியான பொருட்கள் வருவதாக காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருச்சியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கடித்து கொல்ல முயற்சி - காவல்துறை விசாரணை