கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என கோவை ஈஷா யோகா மையம் கூறியுள்ளது. இதனால், அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.
undefined
நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாகக் கருதும் பிரதமர்! ராகுல் காந்தி விமர்சனம்
இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம் வரும் மே 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளது. 31-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், கோவை ஈஷா யோகா மைய தலைவர் சத்குரு அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் பண்டைய மற்றும் நவீன பாரதத்துக்கு பொருத்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் குரலை நசுக்கும் ஆணவம் பிடித்த மன்னன்! மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட்
ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டிருக்கும் சத்குரு, "வலிமைமிக்க சோழர்களின் நிர்வாகச் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவுவது, இந்த ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலத்தை, பலதரப்புகளை உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மையை நினைவூட்டுவதாக இருக்கும். இது ஒரு பெருமைக்குரிய விஷயம். வாழ்த்துக்கள்" என்றும் கூறியுள்ளார்.