திமுகவினர் என்ன சொல்கின்றனரோ அப்படியே காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பணம், பரிசுப்பொருள், கொலுசு, ஹாட்பாக்ஸ் போன்றவற்றை திமுகவினரோடு சேர்ந்து காவல்துறையினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர். கோவையில் இது தொடர்ந்து நடந்து வருகிறது என எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்;- நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து சென்னை, கரூர் போன்ற மாட்டங்களில் இருந்து ஆட்களை இறங்கியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
undefined
கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம். மேலும், திமுகவை எதிர்த்து வாக்கு சேகரிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்கின்றனர். தவறு செய்பவர்கள் மீது புகார் அளிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்கின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர். கோவையில் இது தொடர்ந்து நடந்து வருகிறது.
திமுகவினர் என்ன சொல்கின்றனரோ அப்படியே காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பணம், பரிசுப்பொருள், கொலுசு, ஹாட்பாக்ஸ் போன்றவற்றை திமுகவினரோடு சேர்ந்து காவல்துறையினர் விநியோகம் செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை முழுமையாக காவல்துறையினர் மீறி வருகின்றனர். இந்த வேலையை செய்யாவிட்டால் பணியிடமாறுதல் செய்யப்படுவீர்கள் என காவல்துறையினர் திமுகவினரால் மிரட்டப்படுகின்றனர்.
இவ்வளவு விதிமீறல்கள் நடந்தும் தேர்தல் ஆணையம் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் முழுமையாக திமுகவுக்கு துணைபோய்விட்டது. எனவே, மக்கள் பயமில்லாமல் வாக்களிக்கவும், தேர்தல் ஜனநாயக முறைப்படியும் நடக்க வேண்டுமெனில் துணை ராணுவம் கோவைக்கு வர வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு இந்திய இறையாண்மையை காக்க வேண்டும். நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என வேலுமணி கேட்டுக் கொண்டுள்ளார்.