கட்டின தாலியின் ஈரம் காய்வதற்குள் கார் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி.. நெஞ்சில் அடித்து கொண்டு கதறும் மனைவி.!

By vinoth kumarFirst Published Feb 17, 2022, 8:24 AM IST
Highlights

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுடையன் (60). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா (55). மகன் ஷியாம் பிரசாத் (28). ஐடி நிறுவன ஊழியரான ஷியாம் பிரசாத்துக்கும் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றும் சுவாதி (24) என்பவருக்கும் கடந்த 14ம் தேதி தேனி மாவட்டத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஷியாம் பிரசாத் மற்றும் அவரது மனைவி, பெற்றோர் கோவை வந்தனர். 

கோவை அருகே கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை, அவரது தயார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாப்பிள்ளையின் தந்தை, மணப்பெண்ணும் படுகாயமடைந்தனர். 

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுடையன் (60). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா (55). மகன் ஷியாம் பிரசாத் (28). ஐடி நிறுவன ஊழியரான ஷியாம் பிரசாத்துக்கும் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றும் சுவாதி (24) என்பவருக்கும் கடந்த 14ம் தேதி தேனி மாவட்டத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஷியாம் பிரசாத் மற்றும் அவரது மனைவி, பெற்றோர் கோவை வந்தனர். 

நேற்று காலை ஷியாம் பிரசாத் தனது மனைவி, தாய், தந்தையுடன் காரில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தேனி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சிட்கோ ரயில்வே மேம்பாலத்தின் மீது காரில் சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதின. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஒட்டி வந்த ஷியாம் பிரசாத் டிரைவர் சீட்டில் அமர்ந்த நிலையில் உடல் நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.  இவரது

அவரது தாய் மஞ்சுளாவை படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். மேலும், படுகாயடைந்த மணமகனின் தந்தை மற்றும் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

விபத்தில் உயிரிழந்த ஷியாம் பிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 நாளில் மறுவீட்டிற்கு சென்றபோது புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாளை மறுநாள் கோவையில் வரவேற்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!