எக்கச்சக்க ஊழல்..! கோவையில் பெண் நீதிபதி சஸ்பெண்ட்..!

By vinoth kumar  |  First Published Feb 8, 2022, 12:52 PM IST

கோவையில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக உமாராணி பணியாற்றி வந்தார். கடந்த 2016 - 2018ம் ஆண்டு வரை கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, பல்வேறு வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை திருத்தம் செய்து, லஞ்சம் பெற்று ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்ததாக புகார் எழுந்தது. 

கோவையில் ஊழல் புகார் காரணமாக பெண் நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக உமாராணி பணியாற்றி வந்தார். கடந்த 2016 - 2018ம் ஆண்டு வரை கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, பல்வேறு வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை திருத்தம் செய்து, லஞ்சம் பெற்று ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்ததாக புகார் எழுந்தது. 

Latest Videos

undefined

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் கமிட்டிக்கு புகார் சென்றது. விசாரணையில், நீதிபதி உமாராணி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. ஆனால்,  உமாராணி மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி உமாராணி மீது நடவடிக்கை எடுக்கவும், புலன் விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் கமிட்டி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நீதிபதி உமாராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

click me!