RED ZONEல் மோடியின் தேர்தல் பிரச்சார வாகன பேரணி..! கோவையை கட்டுப்பாட்டில் எடுத்தது எஸ்பிஜி

By Ajmal Khan  |  First Published Mar 17, 2024, 8:25 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தனது முதல் பிரச்சாரத்தை கோவையில் பிரதமர் மோடி தொடங்கவுள்ளார். இதனையடுத்து கோவையை மத்திய உளவுப் பிரிவு  மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அடங்கிய குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது


கோவையில் மோடியின் வாகன பேரணி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தும், இந்தியா கூட்டணி கட்சியை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 5முறை வந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து நாளை கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியின் வாகன பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் திட்டமிட்டபடி வாகன பேரணி நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்துள்ளது, இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ரெட் ஜோனாக கோவை

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகர காவல் துறை பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.  அதன் ஒரு பகுதியாக பிரதமரின் தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை பிரிவினரான எஸ்பிஜி குழுவினர் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ள சாய்பாபா காலனி பகுதி முதல் ஆர் எஸ் புரம் வரை உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாநகர காவல் துறையிடம் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்,

எஸ்பிஜி கட்டுப்பாட்டில் கோவை

இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதி முழுவதும் ரெட் ஜோனா அறிவிக்கப்பட்டு கோவை மாநகர காவல் துறை மற்றும் மத்திய உளவுப் பிரிவு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அடங்கிய குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் அந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையும்,  மத்திய உளவு பிரிவும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் டிரோன் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது அந்த பகுதியில் பிரதமரின் தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

வெறும் 30யே நாட்களில் தமிழகத்தில் தேர்தல்... மதில் மேல் பூனையாக பாமக, தேமுதிக- தவிக்கும் அதிமுக

click me!