கோவை இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்றை அதிகரிக்கும் வகையில் நடத்தப்பட்ட என் மண் என் தேசம்

By Velmurugan s  |  First Published Oct 21, 2023, 11:08 PM IST

கோவையில் இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்றை அதிகரிக்கும் வகையில் தனியார் பொறியியல் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


கோயம்புத்தூர் நீலாம்பூர் பகுதியில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரியில், 'என் மண், என் தேசம் - Meri Maati Mera Desh' நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டதோடு, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் டெல்லிக்கு அனுப்பப்படும் மண்கலசத்தில் கலக்கப்படது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் கோவை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராமன், கந்தசாமி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், கதிர் கல்லூரி நிர்வாகிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ராணுவ முப்படை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tap to resize

Latest Videos

தொடர் விடுமுறை; பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 அம்னி பேருந்துகள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி

இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 75 ஆவது சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், இளைய தலைமுறையினர் தேசத்தை காக்கும் ராணுவத்தினரின் தியாகங்களை உணர்வதோடு, தேச ஒற்றுமை மற்றும் தேச வளர்ச்சிக்கான எண்ணங்களை இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் பேசுகையில், தேசப்பற்றினை வளர்க்கும் விதமாக நிகழ்ச்சி அமைந்ததோடு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது முக்கியமான அம்சம் என தெரிவித்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி பேசுகையில், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முன்னெடுப்பில் மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகள் தேசம் முழுவதும் நடத்தப்படுவதாகவும், இதனை மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ராணுவத் துறையினர் மிகச் சிறப்பாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரம்; 100 நாட்களில் 10 ஆயிரம் கொடி கம்பம் - அரசுக்கு அண்ணாமலை சவால்

நிகழ்ச்சியின் நிறைவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக நேரு யுவ கேந்திரா மற்றும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை சார்பில் 'பஞ்ச பிரான்' உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

click me!