கோவை மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் இன்று மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவை சூலூர், பல்லடம் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பல்லடம் நகரில் இன்று மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று இந்திய பிரதமர் கோவை சூலூர் மற்றும் பல்லடம் வருவதையொட்டி காலை 06.00 மணி முதல் மாலை வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
* பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
* கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
* கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, L&T Bye-pass, பட்டணம் பிரிவு, G-Square, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும். அல்லது.
* கோவை சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூர், அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, அவினாசி வழியே செல்ல வேண்டும்.
* பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
* கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சூலூர் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும்.