கோவை விமான நிலைய விரிவாக்கம்; வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு - மக்கள் வேதனை

By Velmurugan s  |  First Published May 23, 2023, 4:32 PM IST

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் மின் இணைப்பை மின்சார வாரிய ஊழியர்கள் துண்டித்ததால் பொதுமக்கள் கண்ணீர்.


கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்னியம்பாளையம் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு பணத்தை வழங்கப்பட்டது. மேலும் மற்ற பகுதிகளில் அந்த வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசமும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. 

இந்த நிலையில் இன்று விமான நிலைய நிலைய நிலஎடுப்பு தனி தாசில்தார் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையினர் கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரத்தை துண்டித்து விட்டு மீட்டர்களை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos

undefined

தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பெண் காவலர்கள்

அந்த வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் கூறும் போது எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் தந்தால் நாங்களாகவே காலி செய்து விடுவோம். திடீரென்று மின்சாரத்தை துண்டித்ததால் தற்சமயம் கோடை காலம் என்பதால் எங்களால் குடி இருக்க முடியவில்லை. தற்சமயம் பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் மின்சாரம் இல்லாமல் எப்படி இருப்போம் என்று கண்கலங்கி நின்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், சேய் உயிரிழப்பு - உறவினர்கள் சோகம்

இது குறித்து  தனி தாசில்தாரிடம் கேட்கும் போது ஏற்கனவே இந்த பகுதி பொது மக்களுக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் அளித்திருந்தோம். அதன் பிறகும் அவர்கள் வீடுகளை காலி செய்து தராததால் மாவட்ட ஆட்சியரின் உத்திரப்படி இன்று மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

click me!