நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்ட திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா அவரை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.
திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அவிநாசியில் இருந்து விமான நிலையம் வந்து கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுடன், திமுக மருத்துவரணி மாநில நிர்வாகி கோகுல் கிருபா சங்கர் உள்ளிட்டவர்கள் பயணித்தனர்.
அப்போது கனியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா காரில் பயணித்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக நெடுஞ்சாலை ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று பார்த்த ஆ. ராசா, காலம் தாழ்த்தாமல் படுகாயமடைந்த வாலிபரை தூக்கி தனது காரில் அவசர சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கொட்டகையில் இருந்த தீவனங்களை தின்றுவிட்டு விநாயகருக்கு வணக்கம் வைத்துவிட்டு சென்ற காட்டு யானை
மயக்கமுற்ற அந்த இளைஞரை உடன் இருந்து சிறப்பு சிகிச்சையளிக்க, தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் அவர்களையும் அனுப்பி வைத்ததார். இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார். தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் மீது எதிர்பாராத விதமாக வாலிபர் மோதியதனால் இந்த சாலை விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாதிய கொடுமைகள்; எவிடென்ஸ் கதிர் ஆவேசம்