பாசிச பாஜகவை முறியடிக்கும் சக்தி முதல்வர் ஸ்டாலின்: ஆ.ராசா அதிரடி பேச்சு!

By Manikanda Prabu  |  First Published Mar 17, 2024, 12:06 PM IST

பாசிச பாஜகவை முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார்


நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட  ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தி, புளியம்பட்டி, பவானிசாகர் பகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம்  சத்தியில் உள்ள  தனியார் திருமன மண்டபத்தில் நடந்தது. 

அக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாசிச பாஜக ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நமது மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

Tap to resize

Latest Videos

நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒற்றை காட்டு யானை உலா: கோவை அருகே பொதுமக்கள் அச்சம்!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு.க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர். அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.” என்றார்.

click me!