தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்பது 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாகன பேரணி
பிரதமர் மோடி கோவை வருகை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் road show நாளை மாலை 5.30 மணிக்கு துவங்கும் எனவும், 3 கிலோமீட்டர் மேட்டுப்பாளையம் சாலையில் துவங்கி ஆர்.எஸ்.புறம் மத்திய தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நிறைவடைகிறது என தெரிவித்தார். மோடி வாகன பேரணியின் போது ஆங்காங்கே சிறு மேடையில் சமுதாய தலைவர்கள் உட்பட சில பேரை அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மக்கள் பங்களிப்புடன் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் வரும் பாதையில் இருபுறமும் பொதுமக்களும் பங்கேற்கலாம் எனவும் எந்தவித கட்டுப்பாடுகள் யாருக்கும் இல்லையென தெரிவித்தார். தனிப்பட்ட பாஸ் இல்லையெனவும், பிரதமரை அருகிலிருந்து பார்க்க கோவை மாநகர மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
தேர்தல் தேதி தெரிந்ததால் மோடி தமிழகம் வந்தாரா.?
இதுவரை புறநகர் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, தற்போது மாநகருக்கு நம்முடைய தெருவுக்கு வருவதாக தெரிவித்தார் அவரும் நம்மை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக கூறினார். பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோவை மண்டல பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொண்டு கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளாதகவும் தெரிவித்தார். அடுத்ததாக வருகிற 19 ஆம் தேதி சேலத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறினார்.
பாஜகவின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்பது 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிப்பை கூட எதிர்கட்சிகள் அரசியல் பார்த்து விமர்சனம் செய்வதாக குற்றம்சாட்டியவர், தேர்தல் தேதியை தெரிந்துகொண்டு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது அவர்களின் முன் தோல்வியாக பார்க்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லையா.? அலறி அடித்து விளக்கம் கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்