கோவையில் அரசு நகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டத்தை செயல்படுத்திய அமைச்சர்கள் எஸ்எஸ் சிவசங்கர், செந்தில்பாலாஜி சிறிது தூரம் அரசுப் பேருந்தில் பயணம் செய்து சோதனை செய்தனர்.
மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்துகளில் பயணிகள் தாங்கள் இறங்கும் ஊரை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் ஒலி பெருக்கி வாயிலாக ஊர்களின் பெயர்கள் ஒலிக்கச்செய்யப்படும். இதற்கு ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த கருவி ஒருசில தனியார் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டு பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
undefined
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டத்தை துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதியவர்கள், கண் பார்வையற்றவர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பேருந்து நிறுத்தங்களை அறிவதற்கு GPS மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் கருவிகள் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பட்ட பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை; அச்சத்தில் உறைந்த மக்கள்
அதன்படி முதல்கட்டமாக 65 பேருந்துகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சர்கள் அந்த வசதிகளை பரிசோதித்தனர். சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிவானந்தா காலனி வரை பயணம் மேற்கொண்ட அவர்கள் ஒலி அறிவிப்பான் கருவி சரியான முறையில் இயங்குவதை பரிசோதித்தனர்.
பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு; விழுப்புரத்தை தொடர்ந்து கரூரில் கோவிலுக்கு சீல்!