11 ஆயிரம் பேர் கூடுதல் பணி.. எங்கும் மழைநீர் தேங்கவில்லை.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் !!

By Raghupati RFirst Published Nov 12, 2022, 11:41 PM IST
Highlights

தமிழகத்தில் பெய்து வரும்  பருவமழையை ஒட்டி 11 ஆயிரம் பேர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவை மாநகர பகுதியில் கனமழை  பெய்து வருவதால் மழைநீரை போர்க்கால அடிப்படையில்  மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்றும் பணியினை மின்சாரத்துறை செந்தில் பாலாஜி, லங்கா கார்னர் பகுதியை ஆய்வு செய்து கூடுதல் மின் மோட்டார் பொருத்தி லாரி மூலம் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற உத்தரவிட்டார். 

இந்த நிலையில், லங்கா கார்னர் பகுதியில் மழை நீரை அகற்றும் பணியினை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘ கடந்த ஆண்டு மழை பாதிப்பு இடங்களை கணக்கிட்டு பணி மேற்கொண்டு வருகிறோம். கோவையில் அதிகபட்சமாக மழை 10.74 பொழிவு ஏற்பட்டும் எங்கும் நீர் தேங்கவில்லை. மின் வினியோகம் குறித்து ஆய்வு செய்து வந்துள்ளேன். சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுள்ளது. 

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. மோட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 11 ஆயிரம் பேர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து 1 அரை ஆண்டுகளில் 200 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகள் எங்கேயும் சாலைகள் போடவில்லை.

மேலும் கடந்த முறை மழை பெய்த போது தண்ணீர் அதிக அளவில் தேங்கிய இடங்களில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கிய போது  சுட்டிக்காட்டியது போல, தற்போது மழைநீர் தேங்காாமல் இருப்பது குறித்தும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வெளியிட வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

click me!