அதிநவீன ரயில் பெட்டிகளுடன் ஊட்டி மலை ரயில்; மத்திய இணை அமைச்சர் எல். முருகன் துவக்கி வைப்பு!!

By Velmurugan s  |  First Published Jul 15, 2023, 2:55 PM IST

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் ரயில்வே துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்தார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்படுகிறது. கோடை சீசனுக்காக கடந்த நான்கு மாதங்களாக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது

இதுவரை இந்த மலை ரயிலில் பழைய பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதை நவீனமாக்க பெரம்பூர் ரயில்வே பணிமனையில் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பெட்டிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இவற்றை பயணிகள் வசதிக்காக அற்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Latest Videos

திருச்சி பேருந்து நிலையத்தில் சாமானிய பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் போலீஸ்

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். நான்கு புதிய ரயில் பெட்டிகளுடன் இன்று காலை 9.10 மணிக்கு தனது பயணத்தை துவக்கிய சிறப்பு மலை ரயிலை கொடி அசைத்து முருகன் துவக்கி வைத்தார்.

இத்துடன், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் பயணிகளின் வசதிக்காக புதியதாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரயில் டிக்கெட் கட்டண அலுவலகம், டிக்கெட் தானியங்கி கருவி ஆகியவற்றையும் அமைச்சர் எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் ரயில்வே துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. நடப்பு நிதியாண்டில் 6000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் ரயில் திட்ட மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஒன்பது ரயில் வழி தடங்கள் துவங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  1800 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் 90 ரயில் நிலையங்கள் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த உள்ளது'' என்று மத்திய இனை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

click me!