பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் நம்ம ஊர் பள்ளி என்ற கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்திற்கு வந்த அமைச்சர் அங்கு பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் வருகை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவனை புத்தகம் வாசிக்க வைத்தார். மேலும் பள்ளியில் உள்ள குடிநீர் வசதி, கழிவறைகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஓட்டு கட்டிடங்களை இடித்து தரமான கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சமையல் அறையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதனர். இதுகுறித்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
undefined
அரசுப்பள்ளி மாணவர்களை சித்தாளாக பயன்படுத்தி கட்டிட வேலைக்கு ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்
மேலும் போக்குவரத்து வசதி இருந்தால் இன்னும் மாணவர்கள் கூடுதலாக வருவார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாக கூறிய அமைச்சர் இது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் நேரடியாக பேசி பழகினேன். அவர்களும் சிறப்பாக கல்வி கற்று வருகிறார்கள். பள்ளிகளுக்கு வர முடியாத வீட்டில் இருந்து படிக்கக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தனிப்பட்ட ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்றுத் தரப்படுகிறது என கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 97 சதவீதம் உள்ளது, அதை மேலும் 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தெரிவித்ததாக கூறினார்.
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி