அதிநவீன வசதிகளுடன் தொடங்கிய மெமு ரயில் சேவை..! பயணிகள் உற்சாகம்..!

By Manikandan S R SFirst Published Nov 1, 2019, 1:23 PM IST
Highlights

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சென்று வந்த மின்சார ரயில் நேற்று முதல் மெமு ரயிலாக மாற்றப்பட்டது.

கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் ரயில் என்ஜின் முன்னும் பின்னும் மாற்றி மாற்றி பொருத்தப்பட்டு இயங்கி வந்தது. இதனால் நேரம் மற்றும் எரிபொருள் ஆகியவை அதிகம் செலவாகி கொண்டிருந்தது. இதன்காரணமாக தனி என்ஜின் பொருத்தி மெமு ரயிலாக மாற்ற ரயில்வே துறை முடிவெடுத்திருந்தது. அதன்படி மெமு ரயில் சேவை நேற்றிலிருந்து தொடங்கப்பட்டது.

தினமும் நான்கு முறை கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் இந்த ரயில் மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கும் நான்கு முறை இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்து எந்த ரயில்நிலையம் வருகிறது என்பதை அறிவிக்கும் வசதியும் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று தொடங்கப்பட்டது.  புதிய வசதிகளுடன் தொடங்கப்பட்ட மெமு ரயிலில் ஏராளமான பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். 

click me!