பொதுமக்களின் எதிர்ப்பால் மேட்டுப்பாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மக்னா யானை

By Velmurugan s  |  First Published Feb 24, 2023, 11:12 AM IST

அருகே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முள்ளி வனபகுதிக்கு கொண்டுவரப்பட்ட கோவையில் பிடிபட்ட மக்னாயானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.


கோவையில் பிடிக்கபட்ட மக்னா யானை காரமடை வனச்சரத்திற்கு உட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை வெள்ளியங்காடு சாலையில் கொண்டு வந்தனர். யானையை காரமடை அருகே உள்ள முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் யானையை லாரியில் கொண்டுவந்த தகவல் அறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் லாரியை சிறைப்பிடித்து யானையை திருப்பி எடுத்து செல்ல வலியுறுத்தினர்.

யானையை இங்கு விட்டால் மீண்டும் ஊருக்குள் புகும் எனவே இந்த யானையை இங்கு விடக்கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி யானையை  போலீஸ் பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொன்டு செல்லபட்டது.

Latest Videos

undefined

சினிமா பாணியில் காரை குத்தி கிழித்த கொம்பன் யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்

தற்போது யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தபட்டது யானை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை அரசு மரக்கிடங்கில் லாரியுடன் நிறுத்திவைக்கபட்டுள்ளது. யானையை எங்கு கொண்டு சென்று விடுவது என இதுவரை உயர் அதிகாரிகள் முடிவுக்கு எடுக்காததால் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

click me!