சுள்ளிகொம்பன் மீண்டும் ஒரு காரை தாக்கியது, இதில் காரில் இருந்த ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், யானை பிடித்து அடர் வனபகுதிக்கு விட பொதுமக்கள் கோரிக்கை.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன சரக பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒற்றைக் காட்டு யானை சுள்ளிகொம்பன் வால்பாறை சாலை மற்றும் நவமலை பகுதிகளில் நடமாடி வருகிறது, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து காட்டு யானை நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று மாலை வால்பாறையில் இருந்து வந்த காரை சுள்ளி கொம்பன் தாக்கியது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்,பொள்ளாச்சி அருகே உள்ள சங்கம் பாளையத்தை சேர்ந்த சுலைமான் வால்பாறையில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்று திரும்புயுள்ளார். அப்போது வனப்பகுதியில் மறைந்து இருந்த சுள்ளிகொம்பன் திடீரென காரை தாக்கியது.
இதில் காரில் இருந்த ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர், இந்நிலையில் சுள்ளி கொம்பன் சேதப்படுத்திய கார்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. தற்போது வரை 4 கார்கள் சேதமடைந்துள்ளதால், காப்பீடு பெறுவதற்கு ஆழியார் காவல் நிலையத்தில் சுள்ளிகொம்பன் மீது நான்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.