விசாரணைக் கைதியை அழைத்துச் சென்ற வேன் மீது தாக்குதல்… காவலர்கள், கைதி படுகாயம்…!

manimegalai a   | Asianet News
Published : Sep 22, 2021, 12:11 PM IST
விசாரணைக் கைதியை அழைத்துச் சென்ற வேன் மீது தாக்குதல்… காவலர்கள், கைதி படுகாயம்…!

சுருக்கம்

கோவை அருகே விசாரணைக் கைதியை அழைத்துச் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்தை உண்டாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே விசாரணைக் கைதியை அழைத்துச் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்தை உண்டாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி அடுத்த மைலம்பட்டியில் மோசடி வழக்கில் வேலுச்சாமி என்பவரை தேவூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்காக கைதி வேலுச்சாமியை போலீஸார் கோவை அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்ததும் கைதி வேலுச்சாமியை போலிஸார் ஆம்னி காரில் சேலம் அழைத்துச் சென்றனர். சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஈச்சனாரி சந்திப்பு அருகே பின்னால் வந்த ஈச்சர் லாரி போலீஸ் வேன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

அதிகாலை 2 மணிக்கு நடைபெற்ற விபத்தில் கைதி வேலுச்சாமி, ஆம்னி வேன் ஓட்டுனர் மற்றும் போலீஸாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மதுக்கரை போலீஸார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரியை தேடி வருகின்றனர். விசாரணை கைதியை அழைத்துச் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?