20 வயது இளைஞருடன் திருமணமான 26 வயது இளம்பெண் கள்ளக்காதல்... கல்லூரி மாணவனுடன் ஓட்டம்..!

Published : Sep 14, 2021, 06:49 PM IST
20 வயது இளைஞருடன் திருமணமான 26 வயது இளம்பெண் கள்ளக்காதல்... கல்லூரி மாணவனுடன் ஓட்டம்..!

சுருக்கம்

கோவையை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது திருமணமான இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. மாணவன் வீட்டுக்கு தெரியாமலும், மனைவி கணவருக்கு தெரியாமலும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

கோவையில் திருமணமான இளம்பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி மாணவன் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 26 வயது திருமணமான இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. மாணவன் வீட்டுக்கு தெரியாமலும், மனைவி கணவருக்கு தெரியாமலும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் நாளடைவில் மாணவனின் பெற்றோரு தெரியவந்தது. அவர்கள் மாணவனை கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி மாணவன் தனது பெற்றொரிடம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். 3 நாட்களாகியும்  அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்த போதும் இங்கு வரவில்லை என்று கூறிவிட்டனர். 

இதுகுறித்து மாணவனின் பெற்றோர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தனது மகனுக்கும் திருமணமான இளம்பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இருவரும் வீட்டை விட்டு ஓடியதாக சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், இளம்பெண் குடும்பத்தினரும் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?