கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தினமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 46 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தினமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நர்சிங் மாணவர்களுக்கான தேர்வு நடந்துள்ளது. இதற்காக கேரளா மற்றும் கோவையை சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு நர்சிங் மாணவிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். இவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
undefined
இந்த பரிசோதனை முடிவில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு நர்சிங் மாணவிகள் 46 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதில், பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, மாணவிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நர்சிங் கல்லூரிக்கு சுகாதாரத்துறையினர் நோட்டீஸ் வழங்கி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் மாணவ-மாணவிகளை ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து கல்லூரி நிர்வாகங்களுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.