யூடியூபில் விளம்பரம் பார்த்தால், வருமானம் கொட்டும் என்று தனியார் யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்தியது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். MYV3Ads நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
MYV3Ads என்ற தனியார் ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், 50 லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதை உணர்ந்த தனியார் நிறுவனத்தார் தங்கள் முதலீட்டாளர்களைக் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திரள அறிவுறுத்தினர். அதன்படி நேற்று காலை பைபாஸ் சாலையில் மக்கள் தொடர்ந்து குவிந்தனர். லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு நேற்று வந்தனர். அரசு அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.
வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட My V3 Ads நிறுவன எம்.டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் முதலில் காவல்துறையினருக்கு, ஒரு முக்கிய கோரிக்கையை வைக்கிறேன். இன்று கோவையில் மக்கள் திரண்டுள்ளதற்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் காரணம் அல்ல. எங்கள் நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு காரணமாக, மக்கள் தன்னெழுச்சியாக திரண்டுள்ளனர்.
மக்கள் அனைவரும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரள திட்டமிட்டார்கள். இவ்வளவு கூட்டம் கூட வாய்ப்புள்ளது என்பதால் தான் நான், கலெக்டர் ஆபீஸில் அனைவரும் திரண்டால் கோயம்புத்தூரே ஸ்தம்பித்து விடும். அனைத்து அலுவலகங்களுக்கும் பிரச்சனை வரும். அதிகார வர்க்கமும் பெரிய சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். நான் இந்த தகவலை கோவை கமிஷனர் ஆபீஸுக்கு சொல்லியும், பதில் இல்லை.
அதைத்தொடர்ந்து, யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில், எல் & டி பைபாஸ் பகுதிக்கு வருமாறு எங்கள் My V3 மக்களுக்கு கூறினேன். இந்த கூட்டம் கலெக்டர் ஆபீஸுக்கு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப் பாருங்கள். உண்மையில், சமூக அக்கறையோடு, மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்தப் பகுதியில் திரண்டுள்ளனர். அதிகார வர்க்கத்திற்கு, மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
அவர்களுக்கு ஒரு இடத்தை காட்ட வேண்டும் என்பதற்காக எல்.என்.டி பைபாஸ் பகுதியை சொன்னேன். மற்றபடி, எந்த விஷயத்தையும் நாங்கள் முன்னின்று நடத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் எனது செல்போனை நேற்று முதல் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன். மக்களை கூடவே விடாமல் செய்யும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாது” என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!