தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பழைய வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா. தொழிலதிபரான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்துள்ளது. இந்நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவருமான பிரசன்னா என்பவர் அறிமுகமானார். அவர் இடம் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரூ 25 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- வாய், கை, கால்களில் டேப் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 82 வயது மூதாட்டி.. கோவையில் பகீர் சம்பவம்!
மேலும் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. எனவே மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையாவின் மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இடப் பிரச்சினையை தீர்த்து வைக்காமல் பிரசன்னா மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக கருப்பையா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, புகாரின்பேரில் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிரச்சன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, தாயார் கிருஷ்ணகுமாரி மற்றும் மகள் ஆகிய 4 பேரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்ததினர் அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- 7 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் ஆன சிறுமி.. 500 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!
இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரச்சன்ன சுவாமிகளின் தாயார் கிருஷ்ணகுமாரி (62) உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரச்சன்ன சுவாமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.