கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களை ஆதரவற்றோர் என்று அதிரடியாக பிடித்துச் சென்று மொட்டையடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களை ஆதரவற்றோர் என்று அதிரடியாக பிடித்துச் சென்று மொட்டையடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் ஆதரவற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகையால், சாலை ஓரங்களில் சுற்றி திரியும் ஆதரவற்றோரை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்க ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்பார்வையில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனை, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றோர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
undefined
இந்நிலையில், ஆதரவற்றவர்களை மீட்பதற்காக சென்ற தனியார் அறக்கட்டளை ஊழியர்கள் ஆதரவற்றவர்களை மீட்பதாக கூறி அடாவடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பேருந்துக்காக காத்திருந்தவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள் மற்றும் உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள், சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் என பலதரப்பட்டவர்களை ஆதரவற்றோர்களை குற்றவாளிகளை பிடிப்பது போல துரத்தி மடக்கி பிடித்தனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை மொட்டை அடித்து தாக்கி அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காப்பகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது மிரட்டல், தாக்குதல், அத்துமீறி அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காப்பக நிர்வாகிகளை கண்டித்தும், எளிதில் வெளியில் வர கூடிய வகையில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக ஆதரவாளரான செல்வக்குமார் என்பவர் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கூலி வேலைக்கு சென்ற எங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
amount of hate spewed by ruling party on north indian guest workers reached a level where an illegal organ trading group abducted a well educated Jharkhand resident from coimbatore railway station, tonsured his head and held him captive in a remote location pic.twitter.com/vGD8f2tLlR
— Selva Kumar (@Selvakumar_IN)