கோவை மாவட்டம் இடையர் பகுதியில் நள்ளிரவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியைக் கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ அதிகம் பகிரப்பட்டது. வைரல் வீடியோவானது காவல் துறையினருக்கும் பகிரப்பட்டது. வீடியோவைப் பார்த்த காவல் துறையினர் இந்த காட்சி கடந்த 25ம் தேதி கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அசோக் குமார், அரவிந் குமார், தினேஷ் குமார், பார்த்திபன் ஆகியோர் தான் என்பதை கண்டு பிடித்தனர்.
பரோட்டா சாப்பிடும் போட்டி; சூரிக்கே டஃப் கொடுத்த அரியலூர் இளைஞர்கள்
undefined
கடந்த 25ம் தேதி அசோக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இரவு 11.30 மணியளவில் பட்டா கத்தியைக் கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை காவல் துறையினர் உறுதி செய்தனர். நேற்று இரவு ரோந்து பணியின் போது இந்த நான்குபேரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 1000 தூய்மை பணியாளர்கள் போராட்டம்
கைது செய்யப்பட்டவர்களில் அசோக்குமார், தினேஷ் குமார், பார்த்திபன் ஆகியோர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.